” சேர் பெயில் ஆவனதுபோல , ரணில் விக்கிரமசிங்கவும் பெயில் ஆவார். பிறகு இருவருக்கும் வீடு செல்ல நேரிடும். தற்போது பிரதமர் பதவி வகிப்பவர் ரணில் விக்கிரமசிங்க அல்ல, ரணில் ராஜபக்ச ஆவார்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ராஜபக்சக்களை விரட்ட வேண்டும் என மக்கள் போராடிவரும் நிலையில், மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அவர்களை பாதுகாக்க ரணில் ராஜபக்ச களமிறங்கியுள்ளார். அவர் ரணில் விக்கிரமசிங்க அல்லர். இவர்களின் ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதனால்தான் ரணில்கோ கிராமமும் அமைக்கப்பட்டுவிட்டது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment