ranil mp
அரசியல்இலங்கைசெய்திகள்

21ஆவது திருத்தம்: சட்டமா அதிபருடன் ரணில் பேச்சு!

Share

செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்து மீண்டும் நாடாளுமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் இன்று கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நல்லாட்சி அரசால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கொண்டுவந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற வகையில் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுநிலையினர் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருந்தன.

20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான 21ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...