rtjy 173 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்

Share

மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராகி ஜனாதிபதி வேட்பாளராக வரலாம்.

ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே முன்னிறுத்துவது எமது நோக்கமல்ல. ஜனாதிபதித் தேர்தல் வரும்போது நாட்டு மக்கள் எப்படிப்பட்ட வேட்பாளரை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கணிக்க முடியாது.

அதற்கமைய, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

அந்த வேட்பாளர் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக இருப்பார் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...