24 66dfd5556ba12
செய்திகள்இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: அநுர அரசு உறுதி! – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

Share

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டபோது, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

“பொது நிர்வாக அமைச்சகமும் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இலக்கை விரைவாக அடைவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கும், அதற்கான சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கும், தேவையான வசதிகளை வழங்குவதற்காக பொது நிர்வாக அமைச்சினால் ஏற்கனவே ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த நிகழ்வில் தெரிவித்தார்.

வெளிநாட்டு உழைப்பாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...