ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களின் நெருங்கிய சகாக்களும் தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளை தவிர்த்துவருகின்றனரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
திருமண நிகழ்வு மற்றும் வர்த்தக நிலைய திறப்பு விழாக்களில் பிரதம அதிதீகளாக பங்கேற்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே ராஜபக்சக்களின் இணக்கப்பாட்டை பெற்றிருந்தனர்.
எனினும், நாட்டில் தற்போது ராஜபக்சக்களுக்கு எதிராக உருவாகியுள்ள மக்கள் எழுச்சியாலேயே அவர்கள் நிகழ்வுகளை தவிர்த்துவருகின்றனர் என தெரியவருகின்றது.
ஆனால் தாம் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாகவும், சிலரின் வீடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் சென்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews