ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் விசேட சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்சவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
சமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது .
#SriLankaNews
Leave a comment