22 4
இலங்கைசெய்திகள்

பாதுகாவலரை கொலை செய்துவிட்டு 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

Share

புத்தளம் பகுதியில், தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையத்தின் பாதுகாவலொருவர் அடித்துக் கொலை செய்யப்டுள்ளதுடன், 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று(11) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சிலாபம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய காவலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இரவு பாதுகாப்பு கடமைகளில் இவர் ஈடுபட்டிருந்ததாகவும், மறுநாள் காலை அவர் தலையில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் குறித்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அந்த நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முந்தலம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...