Bus fares
இலங்கைஅரசியல்செய்திகள்

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Share

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது பஸ் கட்டணம் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அரச மற்றும் தனியார் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை 14 ரூபாவிலிருந்து 17 ரூபாவரை அதிகரிப்பதற்கும், ஏனைய கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 05 ஆம் திகதி முதல் புதிய பஸ் கட்டணம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே, பஸ் கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...