bus 546546
இலங்கைசெய்திகள்

நிவாரணம் வழங்குக! – தனியார் பஸ் உரிமையாளர்கள் போர்க்கொடி

Share

தமக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீக்கப்படினும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமாட்டோம் என தனியார் பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடக சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக பஸ்கள் இயக்கப்படாமையால் 50 ஆயிரம் பஸ் ஊழியர்களும் 11 ஆயிரம் பஸ் உரிமையாளர்களும் எந்தவித வருமானமும் இன்றி மோசன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தனியார் பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னரும் பஸ்கள் இயங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...