gota 3
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட வன்முறைகள்! – ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

Share

நாட்டில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜுலை 14 ஆம் திகதி பதவி விலகினார். அதன்பின்னர் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் காலத்தை நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...