தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுவரும் நாசகார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு விடுமுறையில் சென்றுள்ள பணிப்பாளர் நாயகம் பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துமாறும் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களினால் இன்று (27) மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விலங்கியல் திணைக்கள நிர்வாகத்தில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவிற்கு அருகில் உள்ள பின்னவல யானைகள் சரணாலயத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
#SriLankaNews
1 Comment