அராலி மத்தி சிறுவர்களால் கவனவீர்ப்பு போராட்டம்!

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை அராலி மத்தி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் எந்த காலை 9 45 மணியளவில் முன்னெடுத்தனர்.

அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அராலி சமுர்த்தி வங்கி வரை வீதி வலமாக பதாகைகளை ஏந்திய வண்ணம் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விபத்துக்களை தவிர்ப்போம் உயிர்களை காப்போம்! ! அழிக்காதே அழிக்காதே உயிர்களை அழிக்காதே!, வேண்டாம் வேண்டாம் அதிவேகம் வேண்டாம்!, கண்ணீரின் வலியறிந்தும் கவனயீனம் தொடர்வது ஏன்!, மதுபோதையில் வாகனம் ஓடுவதை முற்றாக தவிர்ப்போம்!, பயன்தரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்தது ஏன்!, உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அண்மையில் யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில்,இவ்வாறு இடம்பெறும் விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளம் சிறுவர்களின் உயிர்கள் விபத்துக்களால் பறிபோவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM

#SriLankaNews

Exit mobile version