பண்டாரவளையில் அரசுக்கு எதிராகத் தீப்பந்தப் போராட்டம்!

3

பண்டாரவளை மாநகரில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரியளவிலான தீப்பந்தப் போராட்டம் நேற்றிரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நடத்தப்பட்டது.

அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களுமாகப் பெருந்திரளானோர் தீப்பந்தங்களுடன் பங்கேற்றனர்.

பண்டாரவளை மாநகர சபை மைதானத்திலிருந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகப் பண்டாரவளை மாநகர் வழியாக, அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று மணி நேரமாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணி நேரம் தடைப்பட்டு, வாகன நெரிசல்களும் இடம்பெற்றிருந்தன.

மின் துண்டிப்பு நெருக்கடி, எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கண்டித்தே இந்தத் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#SriLankaNews

 

Exit mobile version