“பங்கருக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆளாமல் உடனடியாக பதவி விலகிச்செல்லுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.
“பிரதமரை நீக்கும் அதிகாரம் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு இருக்கவில்லை. ஆனால் 22 இல் நீக்க முடியும் என்ற ஏற்பாடு உள்ளது.
ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. எனவே, 19 தான் 22 ஆக வருகின்றது என்ற கூற்று தவறு,
மகாநாயக்க தேரர்கள் கூறியதுபோல சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும். பதவி விலகி அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி வழங்க வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.
#SriLankaNews
Leave a comment