flight
இலங்கைசெய்திகள்

தொழில் வல்லுநர்கள் 6,000 பேர் நாட்டிலிருந்து வெளியேற்றம்!!

Share

கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட 6,000 க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

தற்போது பணியாளர்களின் சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், 2021 ஆம் ஆண்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...