24 6746f39847efa
இலங்கைசெய்திகள்

குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போது.. தயாரிப்பாளர் சொன்ன தகவல்

Share

குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போது.. தயாரிப்பாளர் சொன்ன தகவல்

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் கமிட்டாகி நடித்து வந்த படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும், ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

ஆனால், அதன்பின் அஜித் கமிட் செய்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி 2025ஆம் ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டு விட்டது

இந்த நிலையில், இடையில் குட் பேட் அக்லி ரிலீஸில் மாற்றம் என கூறி தகவல் வெளிவந்தது. 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருந்த குட் பேட் அக்லி திரைப்படம், தள்ளிப்போய், அஜித்தின் பிறந்தநாள் மே 1 வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நவீன், ரிலீஸ் தேதி குறித்து பேசியுள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு என்ன படம் ரிலீஸ் செய்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் நவீன், அஜித் சார் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என கூறியுள்ளார். இதனால் விடாமுயற்சி படத்திற்கு முன்பாகவே, குட் பேட் அக்லி வெளிவரவிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...