லிட்ரோ சமையல் எரிவாயு சம்பந்தமான பிரச்சினைகள் இருக்குமாயின் அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews