நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மாவீரர் நினைவு கூருவதற்கான தடை உத்தரவை உரியவர்களுக்கு வழங்குவதற்கு வவுனியா பொலிஸார் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிஸாரினால் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிஸாரினால் பெயர் குறிப்பிட்டப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவு கட்டளையை வழங்கியுள்ளது.
குறித்த தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாக சென்று வருகிறார்கள்.
இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாக பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தடை உத்தரவைப் பெற்றவர்கள் குறிப்பிடும்போது, தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள் பிழையாக உள்ளதாகவும், பொலிசாரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment