வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரையில் சுமார் 10 கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு வேண்டி சிறைச்சாலையின் கூரைகள் மீதேறி கைதிகள் நேற்றிலிருந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமாக தீர்வை தமது திணைக்களத்தால் வழங்க இயலாது எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment