வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் பாதுகாப்பு வாகனப் பிரிவு சாரதியொருவர் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையிலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
#SrilankaNews