20220620 115420 2 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

‘கோட்டா கோ கம’வை அழிக்கும் முயற்சியில் பிரதமர்!! – சந்திரசேகரன் தெரிவிப்பு

Share

காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சமகாலநிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரவில்லை. பிரச்சினையை வளர்ப்பதற்காகவே வந்துள்ளார். வரிசை யுகமே தற்போது காணப்படுகிறது. உரம் இல்லாததால் விவசாயத்துறை முழுமையாக
செயலிழந்துள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக தட்டுப்பாட்டினாலும் மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாத உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டாபய அரசாங்கத்தை விரட்டியடிக்க இலங்கையில் உள்ள மக்கள் ஓரணியில் திரள வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...