பிரித்தானியாவில் சடுதியாக அதிகரித்த அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை
பிரித்தானியாவில் (United Kingdom) அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் ஜனவரியில் பணவீக்க வீதம் மூன்று சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்களான பால், பாலாடைக்கட்டி, முட்டைகள் மற்றும் பாண் விலை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, காபி, தேநீர், cereal வகை உணவுகள் மற்றும் மாமிசம் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சர்க்கரை, ஜாம், சொக்லேட் மற்றும் குளிர் பானங்கள் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.