Sri Lanka Bakery Owners Association
இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்கள் விலை குறைப்பு??

Share

பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்போமே தவிர, இன்னும் அதிகரிப்பதற்கான எவ்விதமான தயார் நிலையிலும் தாங்கள் இல்லையென தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, ஆகக் குறைந்தது பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரையிலும் குறைப்பதற்கு
எதிர்பார்த்துள்ளோம் – என்றார்.

இதற்காக அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து இருப்பதாகவும், தற்போது முடங்கி கிடக்கின்ற கைத்தொழிலை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமாயின் பான், பணிஸ் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைத்தால் மட்டுமே அதனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு இறாத்தல் பானின் விலை 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. சில இடங்களில் 180 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதாகவும் தெரிவித்த அவர், இந்த விலை அதிகரிப்பை நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாது உள்ளது.

அதனால், பான்,பணிஸ் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது என்றார். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை பேக்கரி கைத்தொழிலுள்ள பாரிய அழுத்தங்களை கொடுத்துள்ளது. இதனால் இந்தத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல்​வேறான பிரச்சினைகள் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...