24 6623de4ceac6a
இலங்கைசெய்திகள்

வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும்: நாமல் 

Share

வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும்: நாமல்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. யார் அந்தச் சின்னத்துக்குரிய வேட்பாளர் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி வேட்பாளர்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

”எமது கட்சி முன்நிறுத்தப் பரிசீலிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும்( Ranil Wickremesinghe) ஒருவர்.

அவரோ அல்லது வேறு எவரோ ஒருவர் நிச்சயம் மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடுவார் என்பது உறுதி.

எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். ஆனால் வேட்பாளர் யார் என்பது தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கட்சி உரிய சமயத்தில் அதைத் தீர்மானித்து ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...