அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்!
இலங்கைசெய்திகள்

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்!

Share

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்!

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளூராட்சி மன்ற முறைமையில் தற்போது காணப்படுவதை விட, பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.

8715ஆகக் காணப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5000ஆக குறைக்குமாறு கூறப்பட்ட நிலையில், இவர்களால் இரு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு சுமார் 4900ஆக தொகுதிகள் குறைக்கப்பட்டதையடுத்து, பல பிரதேசங்களை இணைப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால், இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படும்.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இதனை நடைமுறைப்படுத்தினால் நல்லிணக்கத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, குறித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை நாம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000இலிருந்து 5000 – 4000 வரை குறைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனவே, விரைவில் இது தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும். தற்போதுள்ள முறைமையில் தேர்தலை நடத்தி 8000 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டால், அதுவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மக்களும் அதனை விரும்பமாட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பே தவிர, புதிய பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதல்ல.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...