ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் 11ஆவது மரணதண்டனைக் குற்றவாளியான ஆர்.துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வௌியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜுலை மாதம் 21ஆம் திகதி மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
#SriLankaNews