image 9f399caa60
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – ஐமச சந்திப்பு வெள்ளியன்று!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாரான திஸ்ஸ அத்தநாயக்க, இன்று மாலை இந்த தகவலை வெளியிட்டார்.

அரசமைப்பு, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவருக்கு, ஜனாதிபதி கடிதம் அனுப்பியிருந்தார்.

அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.

சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

” நாட்டில் தற்போதைய நிலைவரம், கைது வேட்டை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அறிவித்தார்.

சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் என்பன இரு வேறு திட்டங்களாகும். சர்வக்கட்சி அரசியல் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக கலந்துரையாட செல்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...