இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்

WhatsApp Image 2022 09 27 at 5.16.56 PM

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் அவரது பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

#SriLankaNews

Exit mobile version