இடைக்கால அரசில் அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
இதன்படி சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் பொன்சேகா இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
பொன்சேகாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்.
இதன்படி தெற்கு அரசியலில் இன்றைய தினம் முக்கிய சில அரசியல் முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
போரின்போது ஒன்றிணைந்து செயற்பட்ட பொன்சேகாவும், கோட்டாவும் 2010 இல் பிரிந்தனர். இந்நிலையில் மீண்டும் சங்கமிக்க முற்படுகின்றனர்.
#SriLankaNews
Leave a comment