9 20
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க எந்தவொரு முயற்சியும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதை நினைவூட்டுவதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி ஆணையைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் முதலில் 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 உள்ளூராட்சி மன்றங்களிலும் விரைவில் கட்டுப்பாட்டை நிறுவ தாம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், ஆட்சி செய்வதற்கான ஆணையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்படும் எந்தவொரு சபையும்; மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...