2 8
இலங்கைசெய்திகள்

வெளிநாடு பறக்கிறார் ஜனாதிபதி அநுர

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumarra dissanayake) பெப்ரவரி 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு(uae) அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி துபாயில்(dubai) நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றுவார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியுடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கி இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்  இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...