கொரோனா தொற்றிற்கு நடாளவிய ரீதியில் அதிகம் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அனாவசியமாக பயணங்களைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
அதேவேளை, நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. என்றார்.
#SrilankaNews
Leave a comment