பிரபாகரன் தோற்கடித்தார் என்றால், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைப் பற்றி பேசுவதற்குத் தயார் இல்லையென்றால், நீங்கள் ஜனாதிபதியாக வந்து என்ன செய்யப்போகிறீர்கள்.
இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்..
ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாக ஈடுபட்டார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவால் ஏன் இன்னமும் ஜனாதிபதியாக முடியவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நான் இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994இல் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது.
அதனையடுத்து 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்குத் புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாகச் செயற்பட்டார் என்றும் அவர் தெரிவித்திருந்திருந்தார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்திற்கு பதில் வழங்குகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்
#SrilankaNews

