நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 02வது மின் உற்பத்தி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் இன்று மாலையுடன் நிறைவடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு தொடருமாயின் இன்றைய தினம் அது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின், மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்தமை காரணமாக, நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews