சகல வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் செடியுடன் கூடிய பூச்சாடியை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பங்கேற்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து மஞ்சள் செடிகள் அடங்கிய சாடிகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் ஓர் கட்டமாக, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தலைமையில் ஹஸலக்க துங்கொல்ல கிராமவாசிகளுக்கு மஞ்சள் செடிகளை விநியோகிக்கும் திட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது 100 குடும்பங்களுக்கு மஞ்சள் செடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இத் திட்டத்தின் நோக்கம், எதிர்வரும் காலங்களில், ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான மஞ்சளை அந்தந்த வீட்டுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்ய வழிவகுப்பதாகும்.
Leave a comment