ஆ.லீலாதேவி
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளைய கண்டனப் பேரணி ஒத்திவைப்பு!

Share

“நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டும், அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது கண்டனப் பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது. புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.”

– இவ்வாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், நீதி கிடைக்க வேண்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கிச் செல்லும் கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனாலும், நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டும், எமது அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும். சிரமத்துக்கு மன்னிக்கவும். தங்கள் ஒத்துழைப்பு தொடர வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...