sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகாலச் சட்டத்தை உடன் மீளப்பெறுங்கள்! – கோட்டாவிடம் சுமந்திரன் வலியுறுத்து

Share

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனாதிபதியின் இந்தத் தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் கோட்டாபய அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...