நாளை நடைபெறவுள்ள கருத்தரங்கம் பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாடு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
நாளை (12/02/2022) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடத்த தீர்மானித்திருந்த இக் கருத்தரங்கம் கடுமயைான காலநிலை (மழை) காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உரிமையோடு அறியத் தருகின்றோம்.-என்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment