நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,
அந்நிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் 623 வகையான பொருள்களுக்கு குறித்த உத்தரவாத தொகை இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள்.
பானங்கள், பழங்கள், அழகுசாதனப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், பியர், வைன் ஆகியவை.
சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகள்.
ஆகியவை உள்ளிட்ட பொருள்களுக்கு இந்த உத்தரவாத தொகை பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால், மேற்படி பொருள்களுக்கான இறக்குமதி நடவடிக்கையில் மிகப்பெரும் தாக்கம் ஏற்பட இடமுண்டு. இதன் காரணமாக குறித்த பொருள்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment