துறைமுக நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொடர்பாடல் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துறைமுகத்தில் வர்த்தகக் கப்பல் மற்றும் சரக்கு அனுமதியில் தற்போது பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனை தவிர்க்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் 35 மில்லியன் டொலர் செலவாகும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதனை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் துறைமுக டிஜிட்டல் தொடர்பாடல் கட்டமைப்பை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
#srilankaNews
Leave a comment