நாட்டில் அடுத்த மாதமளவில் அரசியல் புரட்சி – ரணில் ஆரூடம்!!

ranil 2

இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அரசியல் புரட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்கிறோம் , இளைஞர்கள் வீதிகளில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர் என்றும் கூறினார்.

அது ஒரு பெரிய சக்தி என்றும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அந்த சக்திகள் தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்களை வீதிப் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளித்து, அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
#Srilankanews

Exit mobile version