நாட்டில் அரசியல் நாடகம்! – மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்கிறார் மரிக்கார் எம்.பி

Marikkar

அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் என அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ஆனால் அமைச்சுகளுக்கான வரப்பிரதாசங்களை அவர்கள் இன்னமும் அனுபவிக்கின்றனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. ஆனால் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம் வரவில்லை. வாகனங்கள், வீடுகள் மீளப்பெறப்படவில்லை.

அமைச்சுகளுக்கான அரசியல் நியமனங்களும் தொடர்கின்றன. எனவே, பதவி துறப்பு என்பது வெறும் நாடகம். எனவே, இந்த அரசு வீடு செல்லும்வரை மக்கள் போராட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

” பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளிவந்துவிட்டது. இதுகூட தெரியாமல் எதிரணி உறுப்பினர்கள் உளறுகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version