தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடி ஆராய்வு!

Share

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்றுக் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் முற்பகல் 11 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய அரசியல் குழு சந்திப்பு மாலை 4 மணி வரை நீடித்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், பொன். செல்வராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ். குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் குழு உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அரசியல் குழுவில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் இருவரும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். எனினும், சாணக்கியன் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

கட்சியின் மத்திய குழுவை விரைந்து கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

#SriLankaNews

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...