நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் நினைவுதினத்தை முன்னிட்டு இன்றையதினம் மட்டக்களப்பில் நினைவுதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டதுடன், கவனவீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொலிஸாரிடம் மிக காரசாரமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் வீடியோ எடுத்த நிலையில், பொலிஸார் என்றால் சீருடையில் வரவும் என தெரிவித்த சாணக்கியன், எஞ்சியுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்ய முயற்சிக்கிறீர்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில், நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment