25 6838ef1eca68a
இலங்கைசெய்திகள்

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு உதவிய பொலிஸார்! அம்பலப்படுத்திய தேசபந்து

Share

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு ஆதரவளிக்கும“ நோக்கில் தென்மாகாணத்தின் பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் இருந்து நிதி பெற்றுள்ளனர் என தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்றில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் சிறப்பு விசாரணை குழு முன்னிலையிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2023.12.31 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 08 உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு ஒன்று இரகசியமான முறையில் தென்மாகாணத்துக்கு சென்றுள்ளது.

இந்த குழுவினர் அங்கு செல்வதை தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கோ அல்லது மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ முன்கூட்டியதாக அறிவிக்கப்பட்டிந்தா?

‘தென்மாகாணத்தில் நான் சுமார் 3 ஆண்டுகாலமாக பொலிஸ் அத்தியட்சகராக பதவி வகித்துள்ளேன். மாத்தறையின் நிலவரத்தை நன்கு அறிவேன். நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வர்த்தகத்தின் பூர்வீகமாகவே மாத்தறை மாவட்டம் உள்ளது.

தென்மாகாணத்தில் பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் ஹரக்கட்டாவுக்கு எதிராக செயற்படவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால் இரவில் கொலை செய்யப்படுவோம் என்ற அச்சநிலை காணப்பட்டது.

ஒருசிலர் ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத வியாபாரங்கள் ஊடாக பணம் பெறுபவர்கள்.

ஆகவே இவர்கள் ஹரக் கட்டாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 2023.12.29 ஆம் திகதியன்று மேல்மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டாவின் விசாரணையின் முன்னேற்றத்தன்மை குறித்து வினவினேன்.

அப்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தடுப்புக்காவலில் உள்ள ஹரக்கட்டாவுடன் தொலைபேசியில் உரையாடல் மற்றும் தொலைபேசி வலைப்பின்னலுடன் தொடர்புக் கொண்டிருந்த 149 பேரின் விபரங்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பித்தனர்.

இந்த 149 பேரை உடனடியாக கைது செய்யுமாறும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினேன்.

இருப்பினும் மாத்தறை பகுதிக்கு இந்த குழு தான் செல்ல வேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை.

2023.12.31 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 08 உத்தியோகத்தர்கள் மாத்தறை வெலிகம பகுதிக்கு சென்றதை தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கோ அல்லது மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ அறிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில் தென்மாகாணத்தின் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹரக்கட்டாவின் மீது அச்சத்தில் இருந்தார்கள், ஒருசிலர் அவரிடமிருந்து பணம் பெற்றிருந்தார்கள்’ என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...