தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது.
சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரனின் ஊடக சந்திப்புக்காக ஊடகவியலாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு சென்றபோது பொலிஸார் அதற்கு அனுமதிக்காததால் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.
அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ஊடக சந்திப்புக்களை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அதிகளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
#SriLankaNews
Leave a comment