இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவத்தில் மொறட்டுவப் பகுதியில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment