tamilni 342 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த தமிழ் பெண்

Share

பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த தமிழ் பெண்

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2023) உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு – வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாகவும் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...