” பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என இலங்கை சட்டத்தில் எதுவும் கிடையாது. மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவே அரசு இப்படியான அறிவிப்பை விடுத்துள்ளது. ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் ‘பொலிஸ் ஊரடங்கு’ என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டபூர்வமானது அல்ல எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கான நகர்வே இதுவெனவும் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment