rtjyt 1 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு அதிர்ச்சி

Share

இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு அதிர்ச்சி

அஹுங்கல்ல – வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரோல்ஸிற்குள் பிளாஸ்டிக் முட்டை இருந்ததென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தான் சாப்பிட்ட முட்டை ரோல்ஸில் ஒன்றில் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக மீன் வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முட்டை ரோல்ஸ் சாப்பிடும் போது, ​​முட்டையை எவ்வளவு கடித்தாலும் உடைத்தாலும், முட்டை உடையவில்லை என்பதனால் அதனை கையில் எடுத்து பார்க்கும் போது அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முட்டை என தெரியவந்ததென மீன் வியாபாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் முட்டை பகுதியை எரித்ததாகவும் ஆனால் அது எரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

முட்டையின் பாகத்தின் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
126381210
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: விஜய் நாளை டெல்லி பயணம்; பலத்த பாதுகாப்பு வழங்குகிறது டெல்லி காவல்துறை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) விசாரணைக்கு முன்னிலையாக, தமிழக...

image 0e7041cd55
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உச்சத்தில் மிளகாய் விலை: நுவரெலியாவில் ஒரு கிலோ மஞ்சள் குடைமிளகாய் 1,500 ரூபாய்க்கு விற்பனை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விநியோகக் குறைபாடு காரணமாக, நுவரெலியா...

Wimal Weerawansa
செய்திகள்அரசியல்இலங்கை

கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்: விமல் வீரவங்ச தலைமையில் நாளை சத்தியாக்கிரகப் போராட்டம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி...

gettyimages 2254664724
செய்திகள்உலகம்

வெனிசுவேலாவில் உச்சகட்டப் பதற்றம்: அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அதிரடி உத்தரவு!

வெனிசுவேலாவில் பாதுகாப்புச் சூழல் மிக மோசமடைந்து வருவதால், அந்நாட்டிலுள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு...